Telegram @akdofficial
Throughout your three tenures, the partnership between our two countries has reached a new level based on mutual trust, global proximity, deep civilizational ties and our common commitment to the prosperity of the people. We are grateful for the steadfast friendship India has extended to Sri Lanka during challenging times, as well as your personal intervention and support. On this historic occasion, when India is marching tirelessly towards great prosperity and success, I look forward to taking the course of the relationship between our two countries forward on an unprecedented basis. Anura Kumara Dissanayake President of the Democratic Socialist Republic of Sri Lanka
Notes
உங்களது மூன்று பதவிக்காலங்கள் முழுவதும், பரஸ்பர நம்பிக்கை, பூகோள ரீதியான நெருக்கம், ஆழமான நாகரிகத் தொடர்புகள் மற்றும் மக்களின் செழுமைக்கான எமது பொதுவான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எமது இரு நாடுகளுக்கும் இடையிலான பங்களிப்பு ஒரு புதிய நிலையை எட்டியுள்ளது. சவாலான காலப்பகுதிகளில் இந்தியா இலங்கைக்கு வழங்கிய மாறாத நட்பு, அத்துடன் உங்களது தனிப்பட்ட தலையீடு மற்றும் ஆதரவிற்காக நாங்கள் நன்றியுடையவர்களாக இருக்கிறோம். இந்தியா பெரும் செழுமையையும் வெற்றியையும் நோக்கி அயராது பயணித்துக் கொண்டிருக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பத்தில், எமது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் உறவின் போக்கை முன்னொருபோதும் இல்லாத அடிப்படையில் முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு நான் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன். அநுர குமார திசாநாயக்க இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி